மியன்மார் பாகானில் பழங்காலச் சின்னங்கள் அழிப்பு

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளால் கைவிடப்பட்ட கோயில்களில் இருந்து நினைவுச்சின்னங்களைச் சிதைக்கும்  கொள்ளையர்களை வேட்டையாட துப்பாக்கி ஏந்திய போலீஸ் குழு மியான்மரின் புனித பாகான் பகுதியை காவல் புரிகின்றனர்.

ஒவ்வொரு மாலையும் அந்தி விழும்போது, ​​சுமார் 100 அதிகாரிகள் பாகான் சமவெளியில் 50 சதுர கிலோமீட்டர் (19 சதுர மைல்) அளவில் காவல் பணியை இரவில் மேற்கொள்கின்றனர்.

நொறுங்கிய நினைவுச்சின்னங்களின் மீது தீப்பந்தங்கள் வீசப்படுகின்றன. அதனால் ரோந்துப்பணியைப் பாதுகாப்புப் படைகள் இரவும் பகலும் மேற்கொள்வதாக போலீஸ் லெப்டினன்ட் கர்னல் சீன் வின்  கூறினார்.

இந்த நேரத்தில்  நினைவுச்சின்ன பகுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதைவிட , ஒரு சவால் மிக்கதாகவே இருக்கும்.

மத்திய மியான்மார்  நகரம் 3,500 க்கும் மேற்பட்ட பழங்கால நினைவுச்சின்னங்களால், ஸ்தூபிகளால், கோயில்கள், சுவரோவியங்கள்,  சிற்பங்களைக்  கொண்டதாக இருக்கின்றன.  இறுதியாக கடந்த ஆண்டு யுனெஸ்கோ உலகப்  பாரம்பரிய பட்டியலிலும் பாகான் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பாகானில்  புதிதாகக் காணப்பட்ட அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை இந்த தொற்றுநோய் வெகுவாய் வீழ்த்தியிருக்கிறது.

பார்வையாளர்களின் பற்றாக்குறையினால் கோயில்களும் ஹோட்டல்களும் காலியாக உள்ளன, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பவாத கொள்ளையர்களுக்கு இது சாதகமாக இருக்கிறது. அதன் விளைவாக இரவு ரோந்துகள் தேவையானதாகிவிட்டன.

ஜூன் மாத தொடக்கத்தில் புனிதத் தலங்கள்  முழுவதும் சூறையாடப்பட்டன. கொள்ளையர்கள் 12 கோயில்களில் கொள்ளையடித்தனர், செப்பு ஸ்தூபங்கள், பழங்கால நாணயங்கள்  ஜேட் நகைகள் உள்ளிட்ட பல நினைவுச்சின்னங்களைச் சிதைஹ்திருக்கின்றனர்.

உள்ளூர் சுற்றுலா, போலீஸ்,  தீயணைப்பு வீரர்களை  மேம்படுத்துவதற்காக 35 ஆவது படைப்பிரிவின் பிராந்திய போலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளது, ஜீப், மோட்டார் சைக்கிள், காலாற்படை மூலம் தளம் முழுவதும் அணிகள் குவிக்கப்பட்டு காவலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இப்பகுதி மிகப் பெரியதாக இருப்பதால் ரோந்து செல்வது எளிதல்ல என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார். கோவிட் -19 க்கு எதிராக பாதுகாக்க கடமையில் உள்ள அனைவரும் முகக்கவசம்  அணிந்திருக்கிறார்கள்.

அப்பகுதியின் ஏராளமான அநீதியாளர்களுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆதலால் எதிரிகள் யாரென்று பெயரிடவும் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

சில நினைவுச்சின்னங்கள் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டை கொண்டவை, பாகான் ஒரு பிராந்திய சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது.

பல தசாப்தங்களுக்குப்பின்னர் இத்தலம் தீவிரமாக குறிவைக்கப்படுவது  இதுவே முதல் முறை என்று பாகானின் தொல்பொருள் துறையின் துணை இயக்குநர் மைன்ட் தான்  கூறுகிறார், கொள்ளையர்கள் கூரையிலிருந்து நுழைவதற்கு எவ்வாறு முற்பட்டார்கள் என்பதை ஒரு ஸ்தூபியை அவர் காட்டுகிறார்.

சுற்றுலாப் பயணிகள் இருந்தபோது, ​​எந்தவிதமான கொள்ளைகளும் இல்லை என்று அவர் விளக்குகிறார், இது வெளிநாட்டினரின் வேலையென்றும்  அவர் நம்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here