வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஙா கோர் மிங் உதவி

தெலுக் இந்தான்

தெலுக் இந்தான் தொகுதியில் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவரும் ஏழை மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார் பேராக் மாநில ஜசெக தலைவரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங்.

சு. சந்திரா எனும் குடும்பமாது குடும்ப வறுமையின் காரணமாக பல சிரமங்களுக்கிடையில் அன்சுன் பார்க் குடியிருப்பில் வாசித்து வருகிறார். கணவரோ உடல் நலம் குறைந்தவர். இவர்களின் நான்கு பிள்ளைகள் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

துப்புரவுப் பணிகள் செய்து தான் ன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் சந்திரா. இருப்பினும் அவருக்குக் கிடைக்கும் சிறு தொகை சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தைச் சமாளிக்க மிகவும் சிரமப்படுகிறார்.

அவரின் குடும்பச் சூழ்நிலையை முன்னாள் கவுன்சிலர் கு. மாரிமுத்துவின் மூலம் தெரிந்துகொண்ட ஙா கோர் மிங் உடனடியாக அவரின் குடும்பத்திற்கு தினசரி உபயோகிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தன் செயலாளர் வூ கா லியோங்கின் மூலம் அவர்களுக்கு வழங்கினார்.

அதோடு தனித்து வாழும் தாயான சு. கஸ்தூரி (வயது 48) ன்பவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் தன் மகனின் கல்விச் செலவுகளை பல சிரமங்களுக்கிடையில் சமாளித்து வருகிறார்.

தமக்கு கிடைக்கும் சிறு தொகை சம்பளத்தை அப்படியே மகனின் கல்விக்காக ஒதுக்கிவிடுகிறார். வீட்டிலோ உணவுப் பொருட்கள் வாங்க பணம் பற்றாக்குறை.

கஸ்தூரி எதிர்நோக்கும் பிரச்சினைகளை தன் உதவியாளர் ஒருவரின் மூலம் தெரிந்து கொண்ட ஙா கோர் மிங் அவருக்கும் தினசரி உபயோகிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவருக்கும் வழங்கினார்.

டில்லிராணி முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here