நாடாளுமன்ற கூட்டத் தொடரின் எஸ்ஓபி – கூடல் இடைவெளி, முகக் கவசம் அவசியமானது

அடுத்த திங்கட் கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்ஓபிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

மிக முக்கியமாக கூடல் இடைவெளி, முகக் கவசம், செனிடைஸர் ஆகியவற்றை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மை செஜாத்ரா செயலியில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மேலும் உள்ளே நுழைவதற்கு முன்பு உடல் வெப்ப நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவைக்குள் நுழைய முடியும். அரசு அதிகாரிகள், ஊடகவியாலாளர்கள் வெளியில் இருக்கலாம் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இதன் எஸ்ஓபிகள் அமைச்சர்களுடனான சிறப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, கத்தார், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இந்தியா, இங்கிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து 1,144 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு சொந்த வீடுகளில் கட்டாயமாக தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். அதில் இருவர் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் எஸ்ஓபியை முறையாக கடைப்பிடிக்கீறார்களா என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நாட்டில் எல்லைப் பகுதிகளில் 67 சாலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குடிநுழைவு பிரச்சினைகள் கொண்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here