இளைஞர்களுக்கு வணிக வாய்ப்புகள்

கூட்டரசு அமைச்சகம் (கே.டபிள்யூ.பி) தனது நகர்ப்புற இளைஞர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வணிகம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மொத்தம் 1,122 வணிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

கோலாலம்பூரின் மத்திய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் ஏற்கனவே பசுமை மண்டலத்தின் கீழ் உள்ளது. அவற்றை வணிக மையங்களுக்குத் திரும்புமாறும் பொதுமக்களை அழைக்கவும் ஊக்குவிக்க அமைச்சகம் விரும்புகிறது என்று அதன் அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசா கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க அமைச்சகம் ஒரு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. தொழில்முனைவோர் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.

இந்த வாய்ப்பு, இளம் தொழில்முனைவோருக்கும் வேலை இழந்தவர்கள் வணிகத்தில் ஈடுபட விரும்புவோர்கலுக்குமானதாகும்.. இது, செயலூக்கமான நடவடிக்கையாகும். இதற்காக 1,000 இடங்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது என்று அவர் ரிவர் ஆஃப் லைஃப் திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் புத்ரா ஜெயாவில் வணிக வளாகங்களுக்காக 169  இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஜூலை முதல், டிசம்பர் வரை 80 பங்கேற்பாளர்கள் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.

இத்திட்டம் 2023 வரை தொடரும். இதில், 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்  பன்கேற்பர்.

ஆர்வமுள்ள இளைஞர்கள்  இன்று முதல் https://usahawanwp.kwp.gov.my என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பங்களின் நிலையை ஆகஸ்ட் 1 முதல் அதே இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கமெண்ட்  1) இளைஞர்கள்தாம் நாட்டின் முதுகெலும்பு என்றால், இந்திய இளைஞர்கள் இல்லாமல் இருந்தால் நலமாகுமா? அடுத்த தலைமுறை என்பதில் இந்தியர்கள் விடுபட்டுவிடக்கூடாது. இதை கூட்டரசு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கமெண்ட்    2) கூட்டரசு அமைச்சகத்தில் இருக்கும் இந்தியப் பிரிதிநிதிகள் விழிப்பாய் இருந்தால் மட்டுமெ உரியதைக் கேட்டுப்பெறமுடியும்? செய்வீர்களா?

கமெண்ட்  3) பொதுத்தேர்தல்  15க்குபின் இது நீடிக்குமா?

கா. இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here