பாதை மாறும் போதை விருந்து

கோலாலம்பூரின் தங்க முக்கோணமாக இருக்கும் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு சேவை குடியிருப்பில் மகா விருந்தொன்று வெகு அமர்க்களமாக நடைபெற்றதை போலீசார் மோப்பம் பிடித்துவிட்டனர். சுற்றி வலைவிரித்தபோது அதில் கலந்துகொண்டவர்கள்  பேர் அடையாளம் காணப்பட்டதில் மேல்நிலை மாணவர்களும் இருந்தானர்.

உலகில் அனைத்தும் அறிந்திருப்பது பொது அறிவாகும். அதைத்தான் மாணவர்களும் செய்திருக்கின்றனர் என்பதெல்லாம் போலீசாருக்கு அவசியம் அல்ல. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பதுதான் அவர்களின் . கடமையாக இருக்கும்போது கடமையை  நிறைவேற்றியதில் மாணவ மீன்களும் இருந்தன என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

அதிகாலை 4.30 மணி ஆழந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். போலிசார் கடமையில் இருந்தனர்.  சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி முகமட் பாஹ்மி விசுவநாதன் அப்துல்லா தெரிவித்தார்.

சோதனையின்போது, ​​28 ஆண்கள், ஆறு பெண்கள் உட்பட 34 நபர்களைப் போலீசார் விசாரித்தனர்.

மொத்தத்தில், 21 பேர் மெத்தாம் பெத்தமின் போதைக்குச் சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.  சிறுநீர் பரிசோதனைக்கு எதிர்மறையானதாகக் கண்டறியப்பட்டவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனியார் கல்லூரி மாணவர்.

கைது செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர், மீதமுள்ளவர்கள்  ஜூலை 7ஆம் நாள் வரை ரிமாண்ட் செய்யப்பட்டனர்

இந்த வழக்கு 1952 ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 15 (1) (அ) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கமெண்ட் : 1)அக்காலத்தில் மனத்தை ஒருநிலைப்படுத்த முனிவர்கள் போதையில் இருந்ததாக ஒரு செய்தி. அதைத்தான் மாணவர்கள் கடைப்பிடிக்கிறார்களோ?

மகிழ்ச்சி ஒன்றே மன இறுக்கத்தைப் போக்கும் என்று ஏற்பாடு செய்த விருந்திலும் தடையென்றால், மன இறுக்கம் எப்படி விலகும்?

கமெண்ட் : 2) மேல் நிலை மாணவர்களுக்கான் கல்விக்கடன்கள் இருந்தால் அதி நீக்கினால் இது போன்ற தவறுகள் குறையும்.

கமெண்ட் :  3)  விருந்துக்கு அனுமதித்த விடுதியாளரையும் நீதிமன்றத்தில் நிறுத்தினால் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்!

 கமெண்ட் :4) இதில் கலந்துகொண்ட இளம் வயது மாணவர்களை அவர்களின் பேற்றொரிடம் காட்டி, உயர்கல்விக்கூடங்களிலிருந்து சஸ்பெண்ட் செய்யலாம்.

கமெண்ட்  5) கூடல் இடைவெளிக் குதடையாக இருந்ததற்காக, உடனடியா தலா ஆயிரம் வெள்ளி அபராதம் வித்திக்கச் செய்யலாம்!

கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here