போலிகள் இல்லாமல் வணிகம் இல்லை?

உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சகம்  சிலாங்கூர் மாநிலத்தில் பத்துமலையில் போலியான பொருட்களை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்தன. இதன் மதிப்பு தோராயமாக 1.6 மில்லியன் வெள்ளியாகும்.

சமீபத்தில் போலியான முத்திரையுடன் ஆடைகள், 96.915  துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை இரண்டு வளாகங்களில் சோதனை  செய்யப்பட்டபோது பிடிபட்டன.

இதன் அமலாக்க இயக்குநர் டத்தோ இஸ்கந்தர் ஹலீம் சுலைமான் கூறுகையில், இந்த நடவடிக்கை நாட்டில் 480 விநியோகஸ்தர்கள், வர்த்தகர்கள் சம்பந்தப்பட்ட கள்ள பொருட்கள் விநியோக  விற்பனையை வெற்றிகரமாக முடக்கியிருப்பதாகக் கூறினார்.

சமூக ஊடகங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் கள்ளப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் உளவுத்துறையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹலீம் சிலைமான் கூறினார்.

வர்த்தகர்கள் சமூக ஊடகங்களில் கள்ளப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறார்கள் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையில் தெரிவிக்க்ப்பட்டிருக்கிறது.

சோதனையில், வளாகம் காலியாக இல்லை என்றும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கண்காணித்த பின்னர் அமலாக்க அதிகாரிகள் உள்ளே நுழைந்ததாகவும் அவர் கூறினார்.

அடிடாஸ், நைக் , பூமா போன்ற தயாரிப்புகள் போலியானவை . சந்தேகிக்கப்படும் பொருட்களளின் உண்மை நிலையைச் சரிபார்ப்புக்காகப் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை உரிமையாளர் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் ஆய்வுகள் நடத்தப்பட்டதாக இஸ்கந்தர் ஹலீம் தெரிவித்தார்.

வர்த்தக முத்திரை சட்டம் 2019 இன் பிரிவு 102 (1) (சி) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்,

அமலாக்க கட்டளை மையத்தை 1-800-886-800 அல்லது 03-88826088 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் புகார்கள் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கமெண்ட் 1)  நாட்டில் எதில்தான் போலி இல்லை. போலியை ஒழிக்க அமலாக்கத்தால் முடியாது. அமலாக்க அதிகாரிகள், பணியாளர்களுக்கு நாட்டின் மீதான விசுவாசத்தன்மைக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

கமெண்ட் 2) மனநல பயிற்சியும் முக்கியம். கடமை கடமைக்காக இருக்கக்கூடாது. கடமை கடமைக் கட்டமைப்பில் இருக்கவேண்டும். அமலாக்க அதிகாரிகள் போலியிலிருந்து வெளியே வந்தால் போலிகள் உள்ளே நுழையாது. அதனால் அடிக்கடி இடமாற்ரம் அவசியம்.

கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here