ரொக்கமில்லா அட்டைகள் இலகுவாக்கப்படவேண்டும்!

ரொக்கமில்லா பரிவர்த்தனை மூத்த குடிமக்களுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறப்படுவதில் உள்ள உண்மைத்துவம் சரிதானா?

பணமில்லா பரிவர்த்தனை மிக பயனானது. ஆனாலும் மூத்த குடிமக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதாகவே பொதுக்கருத்துகள் இருக்கின்றன.

இளைஞர்கள் புதுவகைப் பயன்பாடுகளில் விரைவில் பதிந்துவிடுகின்றனர். பெரும்பாலும் தங்கள் பேரக்குழந்தைகளே மூத்தவர்களின்ன பரிவர்த்தனை தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனர்.

குறிப்பாக இ- வாலட் பரிவர்த்தனை செயல்பாட்டுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் கடைகளின் கட்டணத் தேவைகளை ரொக்கமாகவே பயன்படுத்திகொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கான ரொக்கம் என்பதற்கும் வங்கியை முதலில் நாடவேண்டியிருக்கிறது.

இன்றைய வரிசைப்பிடித்தலில் அது சாத்தியமானதாகவும் இல்லை. பண்மீட்புக்கு வரிசை இல்லையென்றாலும். இடைவெளி கடைப்பிடித்தலால் உதவி நாடுதலும் இயலாது.

அதுமட்டுமல்ல, பண மீட்பு அட்டையை பிறர் கையாள விடுவதிலும் அர்த்தமில்லை.

இ வாலட் போன்ற அட்டைகள் மிகச்சுலபமானது. ஆனாலும், அதில் பணம் இருக்கவேண்டும். அதில் பண ஏற்றம் செய்யப்பட்டால்தான் அதற்கும் மதிப்புண்டு.

இதற்கு ஒரு வழி இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

இதுபோன்ற அட்டைகளைப் பயன்படுத்தும்போது இயல்பாகவே வங்கிக்கணக்கின் இணைப்பு இருக்க வேண்டும்.

இதனால், தனியாகப் பண மதிப்பேற்றம் தேவைப்படாது. சில விற்பனை மையங்களில் பில் கட்டணம் செலுத்த அட்டைகள் ஏற்கபடுவதில்லை.

அட்டைகளால் நன்மை அதிகம் என்றாலும் இன்னும் எளிமையாகவும், மூத்த குடிமக்கள் பயன்படுத்த ஏதுவாகவும் இருந்தால் காத்திருப்பு நெரிசல்களைத் தவிர்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here