வெறி நாய்கள் ஜாக்கிரதை

சபா பெர்ணம் அருகில் உள்ள சுங்கை லியா பாரோ பகுதியில் வெறி நாய்களின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது. நேற்று இப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கோழிகளை நாய்கள் கடித்துப் போட்டு விட்டுப் போயிருக்கும் நிலை இங்கு வாழும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் குறைந்த பட்சம் ஆறு தெரு நாய்கள் மனிதர்களுக்கும் அவர்கள் வளர்க்கும் பிராணிகளுக்கும் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வெறி நாய்கள், கோழிகளைக் கொன்று போட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது கோழிகள் கடிபட்டு செத்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அசிம் என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார்.

ஆறுக்கும் மேற்பட்ட காட்டு நாய்களும் சில தெரு நாய்களும் இப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தாக அசிம் தெரிவித்தார்.

வெறி நாய்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சபா பெர்ணம் நகர அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பது இங்குள்ள பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெறி நாய்களின் தொல்லை காரணமாக இப்பகுதியிலுள்ள முயல் வளர்ப்புப் பண்ணையும் ஆட்டுப் பண்ணைகளும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here