குவியல் குவியலாக குப்பைகள்.. மோசமான நிலையில் கால்வாய்கள் – மனம் குமுறும் செனாவாங் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள்

மோசமான நிலையில் கால்வாய்கள், சீரான நீரோட்டத்திற்கு தடையாக உள்ள வேளையில், கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டு இங்கு தாமான ஸ்ரீ மாவார் அருகில், செனாவாங் அடுக்குமாடி வீடுகளின் வளாக சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவுள்ளது என அப்பகுதி குடியிருப்பாளர்களின் மனக்குமுறலாக இருந்தது.

குறிப்பாக இதன் வளாக சுற்றிலும் காணப்படும் கால்வாய்களில் குப்பைகள் நிறைந்தும் மற்றும் செடி கொடிகள் அடர்ந்தும், அதன் சுவர்கள் இடிந்தும் மோசமான நிலையில் மோசமான பாதிப்பை எதிர்நோக்குகிறது. மேலும் ஆங்கங்கே கைவிடப்பட்ட நிலையில் வாகனங்கள், மோட்டர்சைக்கள் போன்றவைகளோடு, கழிவவுப் பொருட்களுடன் குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் காற்றின் தூய்மைக்கேட்டு பிரச்சனைகளாலும் அவதிப்படுகிறோம் என்றார்கள்.

மேலும் அதன் சுற்றிலும் காடுகள் மண்டிக் கிடப்பதால், அவ்வப்போது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது. இங்கு அடிக்கடி வழிப்பறி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால், அது இப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு பெரும் மிரட்டலாக இருந்து வருவதையும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்த தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வருகை புரிந்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மற்றும் சிரம்பான் மாநகர் மன்ற உறுப்பினர் ஜமிலா சைட் அலி ஆகிய இருவரிடம் அப்பகுதி குடியிருப்பாளர்கள் நேரடியாக புகார் கொடுத்தார்ள்.

அப்பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னர், கட்ட கட்டமாக அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குணா தெரிவித்தார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here