கொரோனாவை விட மோசமான வைரஸ் தடுமாறும் கசக்ஸ்தான்

இன்னமும் பெயரிடப்படாத புதிய வைரஸ் தொற்றினால் கசக்ஸ்தான் நாட்டிப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வகைப்படுத்தப்படாத இந்த வைரஸ் கொரோனா எனப்படும் கோவிட் 19 வைரசை விட பல மடங்கு ஆபத்தானது என சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை மாத மத்தியிலிருந்து இந்த வைரஸ் தாக்கம் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. கசக்ஸ்தானின் அதிராவ், அக் டோபே, சியாம் கெண்ட் போன்ற நகரங்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது.

நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களுள் 30 பேரின் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

நுரையீரல் பாதிப்பு காரணமாக அரையாண்டில் 1,772 பேர் அந்நாட்டில் மரணமடைந்திருக்கிறார்கள். மாதத்தில் மேலும் 628 பேருக்கு புதிதாக இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here