ஆயர் ஈத்தாம், ஐவரி அடுக்குமாடி வீடு ஒன்றின் 13ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம் சிசு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அந்த சிசு தூக்கி வீசப்பட்டிருப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது.
இன்று காலையில் சம்பந்தப்பட்ட 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதிக்குச் சென்று சிசுவின் உடலை எடுத்து, பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.
மாடியில் நிறைய வீடுகள் இருப்பதால் யார் இந்தச் செயலை செய்தார்கள் என தொடர்ந்து சோதனை நடத்தியதில் சிசு 13ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 18 வயது பெண் ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. அவர் விரைந்து கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தீமோர் லாவுட் காவல் துறை தலைவர் சோபியான் சந்தோங் தெரிவித்தார்.