இப்படி குளித்து பாருங்கள் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது.உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகின்றது.

அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை, தாடை, மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும்.

எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகின்றது. எனவே தான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகின்றது.பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது. இது ஆண்களுக்கு ஒத்துவரும்.

பெண்கள் குளிக்கும்போது பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால் தினமும் தலையோடு சேர்த்து எப்படி குளிக்க முடியும்? என்று ஒரு கேள்வி வரலாம். பெண்கள் உடலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம். ஆனால் அதில் சில முறைகளை கையாள வேண்டும்.ஈரத்துணியை தலையில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்குச் செல்ல வேண்டும். பின்னர் உடலில் நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும்.

தலையில் ஈரத்துணி இருப்பதால் தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு இல்லை.குளித்து முடித்து வெளியே வந்து துடைத்து துணியை மாற்றும்வரை தலையில் தலையில் ஈரத்துணி இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறகு அதை சுழற்றினால் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு வரவே வராது. இது ஆரோக்கியமான குளியல். எனவே பெண்கள் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஈரத்துணியைத் தலையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சுடு தண்ணீரில் குளிக்கும்போது, விலாவிய வெந்நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் ஊற்றவேண்டும்.
பின்பு மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். அதேபோல் சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும்.பிறகு உடலில் ஊற்றவேண்டும். இதை மாற்றி செய்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவேதான் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச்செல்லும்போது நாம் அதை கடவுளாக நினைத்து முதலில் கால் வைக்கக்கூடாது, கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளவேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கையில் எடுத்து வாயில் குடிக்கவேண்டும்.
இந்த இரண்டு காரியத்தையும் செய்துவிட்டு குளித்தால் அந்த தண்ணீர் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
வாட்டர் ஹீட்டரில் குளிக்கும்போது இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்ற கருவிமூலம் தண்ணீரை கொதிக்கவைத்து பிராணன் இல்லாத தண்ணீரை நேரடியாக ஷவர் மூலம் குளிக்கிறோம். இதில் முதல் தவறு தண்ணீரை சூடு செய்து பிரணனையை எடுப்பது, இரண்டாவது தவறு சுடுதண்ணீரை தரையில் ஊற்றுவது.

இதனால்தான் இப்போதுள்ள மக்கள் கோபம், டென்சன், பயத்தோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் ஏன் மனசாட்சி இல்லாத நாய்போல் கத்துகிறார்கள் என்றல் அதற்கு காரணம் இந்த குளிக்கும் முறைதான்.

எனவே இனிமேல் பச்சைத் தண்ணீரில் குளிக்கும்போது தலையிலிருந்தும், வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்தும் ஆரம்பிக்கும்போது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here