கடனைத் திரும்பச்செலுத்தக் காத்திருக்க வேண்டாம்– ஏகேபிகே ஆலோசனை

கோவிட் -19க்குபிறகு நிதித் தடைகளை எதிர்கொள்ளும் தனிநபர்கள், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குக் கடனைத்  திருப்பிச் செலுத்தும் காலம் சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே.

எவ்வாறாயினும், செப்டம்பர் 30க்குப் பிறகு கடன் வாங்கியவர்கள் வழக்கம்போல கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

தடைக்காலம் விரைவில் காலாவதியாகும் நிலையில், கடன் வாங்குபவர்கள் இப்போதிருந்தே தங்கள் நிதிகளைத் திட்டமிடத் தொடங்க வேண்டும் என்று கடன் ஆலோசனை, கடன் மேலாண்மை துறை (ஏ.கே.பி.கே) பொது மேலாளர் (செயல்பாட்டு பிரிவு) ஃபஸ்லீன் ஜக்காரியா கூறினார்.

தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் அக்டோபரில் மட்டுமே தொடங்கும் என்றாலும், கடைசி நிமிடம் வரை காத்திருக்கத் தேவையில்லை. முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் அவர்களின் நிதிகளை நிர்வகிக்க வேண்டும்.

தங்கள் மாதத் தவணைகளைச் செலுத்த முடியவில்லை என்று நினைக்கும் கடன் வாங்குபவர்களுக்கு, அவர்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், கடன் திருப்பிச் செலுத்துதல்களை மறுசீரமைக்க அல்லது மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்தந்த நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசிப்பதுதான்.

கடன் வழங்குநர்களாக நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால், கடன் வாங்கியவர்கள் செலுத்த முடியாவிட்டால், அவர்கள் தங்கள் நிதி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அவர்களின் பிரச்சினைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள கடன் வாங்குபவர் என்ற முறையில், அந்தந்த நிதி நிறுவனங்களிடமிருந்து நீங்கள் ஆலோசனையைப் பெறலாம், ஏனெனில், அவர்கள் உங்கள் கடன்களை மறுசீரஅவர்களின் நிதிகளின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

AKPK இன் DMP மூலம், நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து தனிப்பயனாக்கப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை உருவாக்க ஆலோசகர்கள் உங்களுடன் பணியாற்றுவார்கள்.  டி.எம்.பி சேவைகள் தனிநபர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

தடைக்காலம் காலாவதியான பிறகு செலுத்த வேண்டிய சமீபத்திய மாதத் தவணைகள் குறித்த தகவல்களுக்கு நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள நினைவில் கொள்ள வேண்டும். மாதாந்திர கடன் திருப்பிச் செலுத்துவதில் மாற்றம் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here