சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டடிருக்கிறது. இத்தேர்தலில் 93 நாடாளுமன்ற இடங்களுக்கான போட்டியில் 83 மசெக வென்றது.
மசெகவுக்கு 61.24 விழுக்காட்டினர் வாக்களித்திருக்கின்றனர். இது ஒரு தெளிவான தேர்தல் என்றும் மக்கள் கூறினர்.
அனைத்து 31 தேர்தல் பிரிவுகளிலும் மசெக வேட்பாளர்களை நிறுத்திய தொடர்ச்சியான இரண்டாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
1965ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக அனைத்து இடங்களும் போட்டியிட்ட 2015 பொதுத் தேர்தலில், மசெக 89 இடங்களில் 83 இடங்களைப் பிடித்தது, மக்கள் வாக்குகளில் 69.9 விழுக்காட்டைப் பெற்றிருந்தது.
சிங்கப்பூருக்கு ஆண்மைஅய தேர்தல் 18 ஆவது பொதுத் தேர்தலாகும். சுதந்திரம் பெற்ற 13ஆம் தேதியில், நடைமுறையில் உள்ள கோவிட் -19 நிலைமைக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைதூர விதிமுறைகள் கட்டுப்பாடுகளுடன் புதிய இயல்பு நிலையில் இத்தேரதல் நடைபெற்றது. மக்களின் வசதிக்காக கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற நேர்முக பத்திரிகையாளர் சந்திப்பில் லீ பதலளித்துப்பேசினார். ஒட்டுமொத்தமாக, இந்தத் தேர்தலின் முடிவுகளில் நான் திருப்தி அடைகிறேன் என்றார்.
மக்கள் செயல் கட்சி ஒரு தெளிவான ஆணையைப் பெற்றிருக்கிறது என்றார். 61விழுக்காட்டுக்கும் கூடுதலாக மக்கள் வாக்குகளித்திருக்கின்றனர். போட்டியிட்ட 93 இடங்களில் 83 இடங்கள் வெற்றியைகொடுத்திருக்கின்றன.
முடிவுகள் பரந்த ஆதரவை பிரதிபலிக்கின்றன. சிங்கப்பூரர்கள் இப்போது ஆபத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூருக்காக நாம் ஒன்றுபட வேண்டும் என்பதை வாக்களிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்கள் என்றார் அவர்.
இந்தத் தேர்தல் கோவிட் -19 இன் சவாலை எதிர்கொள்வதில் குடியரசிற்கு முக்கியமான பங்கு இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
தொற்று நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சிங்கப்பூரர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயல்படுமாறு லீ அழைப்பு விடுத்தார்.
ஒரு சிங்கப்பூர் அணியாக ஒன்றாக முன்னேறுவோம் என்று அவர் கூறினார். இதில் 2.3 மில்லியன் வாக்காளர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 93.56 விழுக்காட்டினர் வாக்குகள் அளித்திருக்கின்றனர்.
பாதுகாப்பான பொதுத் தேர்தலை உறுதிசெய்ய, கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பல வாக்குச் சாவடிகள் இருந்ததால், வாக்குப்பதிவு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.