ருக்குன் தெத்தாங்காவுக்கு அலுவலகம்

கூச்சிங் ருக்குன்  தெத்தாங்கா (கேஆர்டி)   கண்காணிப்பு செயல்பாட்டு மையமாக பயன்படுத்த தேசிய ஒற்றுமை அமைச்சகம் சரவாக் நகரில் ஏழு ஒற்றுமை வளாகங்களை நிர்மாணிக்கிறது.

அதன் அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாடிக் , வளாகங்களை நிர்மாணிப்பதற்கான இடங்கள் மாநில அரசால் தீர்மானிக்கப்படும் என்றார். அவற்றில் இரண்டு இங்குள்ள சடோக் சமாரியாங்கில் அமையும்.

இன்னும் ஒதுக்கீடு இல்லாத, நிரந்தர கட்டடம் இல்லாத கேஆர்டிக்கு  ஓர் அலுவலகம், தேவையான வசதிகளுடன் கூடிய அறைகள் வழங்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இங்குள்ள கம்போங் செமரியாங் பத்துவில் பெர்பாடுன் பெர்காசா கொமுனிட்டி நிகழ்ச்சியின்போது அவர் இதனைக்  கூறினார்.

இந்த ஆண்டு கேஆர்டிக்கு மானியமாக 500 வெள்ளி அதிகரிப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்த தொகை 1,000  வெள்ளியாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here