தடயம் முதல் அத்தியாயம்

மணி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தடயம் முதல் அத்தியாயம்’. உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்டுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இதில், கதையின் நாயகனாக பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, நடித்திருக்கிறார். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். விஐய் அன்டரிவ்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் மணி கார்த்திக் கூறியதாவது: போலிஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும்  தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்கப்பட்டுள்ளது. தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here