தந்தையை போலவே மகனையும் முகத்தில் கடித்த பாம்பு..!

பிரபல விலங்கியல் படத்தொகுப்பாளர் ஸ்டீவ் இர்வின் போலவே அவரது மகனையும் பாம்பு முகத்தில் கடித்தது,

தந்தைக்கு நேர்ந்தது போலவே மகனுக்கும் நேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் விலங்குகளை அனாயசமாக கையாள்வது குறித்த தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர். இவரது காலத்தில் இதே வகையான பாம்பு கன்னத்தில் கடித்திருக்கிறது. எனினும் அவர் அதிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்தார்.

பின்னர் ஸ்ட்டிரிங் ரே எனப்படும் அட்டவண்ணைத் திருக்கை மீன் தாக்குதலால் உயிரிழந்தார்.

தந்தையைப் போலவே பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை கையாளுவதில் வல்லமை பெற்றிருக்கும் மகனையும் தற்போது பாம்பு தீண்டியுள்ளது. முன்பு இர்வினை தாக்கியே அதே வகை ஆஸ்திரேலிய ராஜநாகம் கன்னத்தில் தீண்டியது.  

ஸ்டீவ் இர்வின் கையாண்ட போது அவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இதே வகை பாம்பு கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here