விரைவு பேருந்து தீயில் அழிந்தது : 37 பேர் காயமின்றி தப்பித்தனர்

சிபு: முக்காவிலிருந்து கூச்சிங்கிற்கு சென்று கொண்டிருந்த விரைவு பேருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரவு கம்போங் ஜெராக், ஜாலான் சீரியன்-ஸ்ரீ அமான் அருகே தீப்பிடித்தது. அதில் பயணித்த முப்பத்தேழு பயணிகள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.18 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு அறிக்கை கிடைத்ததாகவும், உடனடியாக சீரியன்  தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் தியோங் லிங் ஹாய் தெரிவித்தார்.

தீ விபத்தில்  பேருந்து 90 விழுக்காடு அழிந்தது. அதிர்ஷ்டவசமாக 35 பயணிகள் மற்றும் பஸ்ஸின் இரண்டு ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று அவர் கூறினார் பஸ்ஸின் இடது பின்புற சக்கர பகுதியில் இருந்து  தொடங்கிய தீ இரவு 10.54 மணியளவில்  முற்றிலுமாக அணைக்கப்பட்டது என்று தியோங் சியாட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here