ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஈரானும் சீனாவும் ஒன்று சேர்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு பயந்து உலக நாடுகள் எல்லாம் ஈரானை புறக்கணித்து வந்த நிலையில், சீனா அந்த நாட்டில் சுமார் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்களே! (உண்மை அர்த்தம் வேறு) அப்படித்தான், எங்கோ இருவர் சண்டை போடவதும், ஒன்று சேர்வதும், இந்தியாவை பாதிக்கிறது. உலகமயமாக்கல் விளைவால் ஏழை நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றுவதற்கும், அந்த நாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு அணுகூலமான பலன்கள் பெறுவதற்கும் பணக்கார நாடுகளுக்கு இடையே கடும் போட்டி அதிகரித்துள்ளது.

இதுதான் இன்றைய நிஜமான எதார்த்தம். 5 வருடம் யோசித்த இந்தியா.

தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா! அமெரிக்கா கோபம் ஈரானை ஆரம்பம் முதலே அமெரிக்காவுக்கு பிடிக்காது. ஈராக்கை தாக்கி அழித்த மாதிரி, ஈரானையும் காலி செய்துவிடும் அளவுக்கு அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதேபோல் ஈரானும் அமெரிக்கா மீது தீராத பகையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீதும் அமெரிக்கா கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்தது.

இந்த கோபம் எப்படி மாறியது என்றால், சீனாவின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஒடுக்கி அந்த நாட்டை தனிமைப்படுத்தி மிரட்டி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்கிற அளவுக்கு மாறி உள்ளது.

இதுநாள் வரை மென்மையான போக்கை தங்களிடம் கடைபிடித்து வந்த அமெரிக்கா , எதிரியாக நினைத்து பாய காத்திருப்பதை சீனா அமைதியாகவே வேடிக்கை பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு பிடிக்காத ஈரான், வடகொரியா ரஷ்யா உடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடியாக களம் பதித்து ஈரானுக்கு தற்போது தோள்கொடுக்கவும் முடிவு செய்துள்ளது சீனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here