தேசிய மின்சார வாரியத்தின் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் பந்துவான் பிரிஹாத்தின் எலக்ட்ரிக் (பிபிஇ) உதவி மூலம் மின்சார கட்டணச்சுமையைக் குறைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை மக்கள் வெகுவகா வரவேற்றுள்ளனர்.
மார்ச் 18 ஆம் நாள் இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தப்பட்டதிலிருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பயனீட்டாளர்கள், பொதுவாக இம்முயற்சியில் திருப்தி அடைந்தனர்.
ஜூன் மாதத்தில், எரிசக்தி இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா, உள்நாட்டு பயனீட்டாளர்களில் மொத்தம் நான்கு மில்லியன் அல்லது 52.2 சதவீதம் பேர் ஆர்.எம் .77 க்கும் குறைவான மின்சார கட்டணங்கள் அல்லது 300 கிலோவாட்டிற்கு குறைவான பயன்பாட்டுடன் மூன்று மாதங்களுக்கு நிவாரண அடிப்படையில் இலவச மின்சாரத்தை அனுபவிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையில், 300 கிலோவாட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் உள்நாட்டு பயனீட்டாளர்கள் ஏப்ரல், மே , ஜூன் மாதங்களுக்கு மொத்த தள்ளுபடி 231 வெள்ளி, அதாவது மாதத்திற்கு 77 வெள்ளி பெறுவார்கள்.