துருக்கி ராணுவ விமானம் விழுந்ததில் எழுவர் மரணம்

துருக்கி நாட்டின் கிழக்கு வான் மாகாணத்தில்  உளவு விமானம் விபத்துக்குள்ளானதில் ஏழு துருக்கிய பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

துருக்கிய அரசுக்குச் சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் வியாழக்கிழமை அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லுவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் 2,200 அடி (670 மீட்டர்) உயரத்தில் ஒரு மலையில் மோதியதாக சுலைமான்   தெரிவித்தார். இறந்தவர்களில் இரண்டு விமானிகளும் அடங்குவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் புலனாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை இரவு 10.32 மணிக்கு  விமானத்தின் கடைசித்  தொடர்பு கிடைத்தது.

தென்கிழக்கு துருக்கியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சம்பவம் தொடர்பில் துருக்கிய பாதுகாப்புப் படைகள் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி  போராளிகளுடன்  போரில் ஈடுபட்டு வருகின்றன.

1984 ஆம் ஆண்டு தொடங்கி துருக்கிய அரசுக்கு எதிராக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. பெரும்பாலும் குர்திஷ் தென்கிழக்கில் சுயாட்சிக்கான கிளர்ச்சியை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here