அடிமடியிலேயே கைவைக்கும் ரஷ்யா

ரஷ்யாவின் ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிர்ந்தது இங்கிலாந்து, மேலை நாடுகள் பேரதிர்ச்சி.

அமெரிக்க, பிரிட்டிஷ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. ரஷ்யாவின் கிரம்ளின் நகரில் இருந்து ஹேக்கர்கள் முயற்சி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கிங் குழு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் , பிற சுகாதார அமைப்புகளின் தடுப்பூசிகள் குறித்த உளவுத்தகவல்களைத் திருட முயற்சிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய இந்த குழு, ஏபிடி 29 கோஸி பியர் என அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட குழப்பத்தைச் சுரண்ட இந்த ஹேக்கர்கள் குழு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், ரஷ்யர்கள் தங்கள் சொந்தத் தடுப்பூசியை விரைவாக உருவாக்குவதற்காக, மற்ற நாடுகளின் அந்த ஆராய்ச்சியைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றனர்.

இங்கிலாந்து, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளதாக அறிவித்திருந்தது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிரிட்டிஷ்-ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறன்றன.

இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. பிரிட்டன் புகார் இந்நிலையில் இந்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திருடுவதுதான் ரஷ்ய ஹேக்கர்களின் முக்கிய இலக்காக இருப்பதாக பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பின் G.C.H.Q. இன் முன்னாள் தலைவர் ராபர்ட் ஹன்னிகன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here