தாடி அதிகம் இருந்தால் கொரோனா தொற்றுமா?

கொரோனா வைரஸ் மக்களிடையே தனி மனித சுகாதாரத்தைக் கற்றுக் கொடுத்துள்ளதோடு, மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. தினந்தோறும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்துன் வருகின்றன.

கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அது சிலருக்கு அறிகுறிகளைக் காட்டுவதோடு, பலருக்கு எந்த ஓர்  அறிகுறியையும் காட்டாமல் இருக்கும். இதனால் மேலும் அச்சம் எழுகிறது.

கொரோனா வைரஸ் நெருங்கிய தொடர்புகளால் பரவும் என்பதால், சலூன் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அழகு நிலையங்களுக்கு அடிக்கடி செல்லும் பெண்கள் சற்று கஷ்டப்பட்டாலும், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு தங்கள் அழகைப் பராமரித்துக் கொள்கிறார்கள்.

ஆண்களோ சற்று சோம்பேறித்தனம் கொண்டவர்கள். சலூன் கடைகள் மூடி இருந்தால், திறக்கும்போது போகலாம் என்று நினைப்பவர்கள். இதன் விளைவாக தற்போது பல ஆண்கள் தாடியுடன் தேவதாஸ் போன்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாகவே ஆண்களுக்குத் தாடி இருந்தால் தான் அழகு என்ரு கருதுகின்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தற்போதைய கோவிட் காலச் சூழ்நிலையில் தாடி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என்கிறது மருத்துவ ஆய்வு. எவ்வளவு தாடி வைத்துள்ளார்களோ, அவ்வளவும் அழுக்கு, கிருமிகள் படிந்திருக்குமாம்.

அப்படியென்றால், நீளமான தாடி வைத்திருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதா என்றும்  கேட்கலாம். கொடிய வைரஸ்களைப் பற்றி படிக்கும் ஒரு வைராலஜிஸ்ட் இப்படிக்கூறுகிறார்.

பெரிய, புதர் போன்ற, அடர்த்தியான தாடி, மீசை முகத்தில் இருந்தால், அது மாஸ்க்கை சரியான முறையில் அணிய இடையூறு விளைவிக்கும் என்கிறார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஒரு பெரிய பாதையை அமைத்துத் தருவதாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்களைப் பற்றி படித்த குயின்ஸ்லாந்தின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நைகல் மக்மில்லன், பாதுகாப்பிற்காக அணியும் மாஸ்க்கின் செயல்திறனுக்கு, தாடி தடையாக இருக்கிறது என்கிறார்.

கொரோனா வைரஸ் பரவ முக்கிய காரணிகளாக இருக்கும் காற்றில் உள்ள நீர்த்துளிகள், உடலுக்குள் நுழைய முகம், வாய், மூக்கு பகுதியை பயன்படுத்துவதால், அப்பகுதியை மறைப்பதற்கு மாஸ்க்குகள் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக தொற்றுநோய்களின் போது, முன்னணி சுகாதார ஊழியர்கள், டெலிவரி வேலைகளைப் புரிபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அதற்கு அவர்கள் தினந்தோறும் சவரம் செய்ய வேண்டும். முகத்துத்தாடியை மழிப்பது பாதுகாப்பானது. மேலும் கொரோனா வைரஸிடம் இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் கூறினார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here