சுற்றுலாத்துறையை மேம்படுத்த கிளந்தான் மாநில அரசு விடுதிகளின் சுத்திகரிப்பு முறையை அதிகக்கவனத்துடன் கையாண்டுவருகிறது.
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை புதுப்பிக்க இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கிளந்தான் ஒற்றுமை, கலாச்சாரம், பாரம்பரியம், சுற்றுலா குழுவின் தலைவர் டத்தோ அனிசாம் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
தொற்றுநோய் முடிவடையவில்லை என்றாலும், சுற்றுலாத்துறை தொடர வேண்டும், குறிப்பாக உள்நாட்டு மட்டத்தில் சுற்றுல்லா ஊக்கிவைக்கபடவேண்டும்.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்க பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்கள் விடுமுறை நாட்களை, குறிப்பாக பல கலாச்சார , இயற்கை இடங்கள் உள்ள கிளந்தான் மாநிலத்தைத்தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். என்று அவர் 2020 கிளந்தான் மீடியா எக்ஸ்பிரஷன்ஸ் புரோகிராம் நைட் , ‘ஹாலிடே வித் ஃபயர்ஃபிளை (“ஜோம் சுத்தி பெர்சாமா ஃபயர்ஃபிளை) நிகழ்ச்சியைத் தொடக்கு வைத்த்போது அவர் தெரிவித்தார்.
கலாச்சாரம், பாரம்பரியம், உணவு , சமூகங்கள் சம்பந்தப்பட்ட அனுபவமிக்க சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தைக்கொண்டதாக 2020 மீடியா எக்ஸ்பிரஷன்ஸ் திட்டம் என்று அனிசாம் கூறினார்.
ஃபயர்ஃபிளை தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் சீ, சுற்றுலா மலேசியாவின் மூத்த தகவல் தொடர்பு இயக்குநர் இஸ்கந்தர் மிர்சா மொஹட் யூசோஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், புதிய இயல்புக்குள் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஃபயர்ஃபிளை எடுத்துள்ளது என்றார் அவர்.