நாட்டின் நிதித்திட்டம் ஆராயப்படும்!

நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கள் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதில் மக்கள், பங்குதாரர்கள் சமர்ப்பித்த ஒவ்வொரு திட்டத்தையும் நிதி அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று துணை நிதியமைச்சர் டத்தோ அப்துல் ரஹீம் பக்ரி கூறியிருக்கிறார்.

சிறந்த சாத்தியங்களை உருவாக்குவதன் மூலம், நாட்டுக்காக முடிந்ததைச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றும், அதே நேரத்தில் வழிகாட்டியாக மற்ற நாடுகளின் வெற்றிகளையும் தோல்விகளையும்  ஆதாரமாகக்கொண்டு செயல்படும் என்றார் அவர்.

கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட சுகாதார அவசரநிலை, உலக வரலாற்றில் மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் பொருளாதாரப் பாதிப்பு கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றார் அவர்.

2020 ஆண்டின்  முதல் காலாண்டில் மலேசியா 0.7 விழுக்காட்டு வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்தாலும், இரண்டாவது காலாண்டிலும் அடுத்தடுத்த காலாண்டுகளில் உலகளாவிய பொருளாதாரச் சரிவின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும் என்றார் அவர்.

பல்வேறு நிதி முயற்சிகள், நாணய தலையீட்டைத் தொடர்ந்து மலேசியாவில் வெ.295 பில்லியன் மதிப்புள்ள திட்டங்களால் மீட்பு அறிகுறிகளைக் காணமுடிந்தது.  செப்டம்பர் மாதத்தில் முடிவடையும் மாதம் வெ. 100 மில்லியன் மதிப்பிடப்பட்டிருக்கும்ம் உதவி திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ) சில்லறைத் துறைகள்  மேம்பாடு கண்டுவருகின்றன. பெரிய அளவிலான ஹோட்டல்களும் சுற்றுலா சேவைத் துறைகளும் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ரஹீம் கூறினார்.

இப்போது அரசாங்கத்தின் முன்னுரிமை வேலையின்மை விகிதத்தைக் குறைப்பது, உள்ளூர் தொழிலாளர்கள் ஊதிய மானியம், மறுபயன்பாடு ,  மறுசீரமைப்பு ஆகியவற்றின் மூலம் மறு வேலைவாய்ப்புகளைப் பெறுவதை உறுதிசெய்வது,  இ-காமர்ஸ் வணிக நடவடிக்கைகள்,  பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவே கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here