வேலையின்மைத் தொடர்பான பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சரிடம் வேலையின்மை விகிதம், இந்த ஆண்டு இறுதி வரை நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேள்விகள் எழுப்புவார்.
கேள்வி பதில் அமர்வின் போது எழுப்பப்படும் இக்கேள்வியில் வேலையின்மை விகிதத்தை சீரமைக்க அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்பார்.
இதற்கிடையில், பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நிஜார் ஜக்காரியா உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் வழங்கிய வணிக உரிமங்களை துஷ்பிரயோகம் செய்வது, வீட்டுவசதி , உள்ளாட்சி அமைச்சகத்திடம் வெளிநாட்டினருக்கு வர்த்தக உரிமங்களை விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகலை முன்வைப்பார். அதற்கான அரசின் நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்ற அமர்வின் ஐந்தாவது நாளில் நுழையும் பாராளுமன்ற அமர்வில் கேள்விகள் எழுப்பப்படும்.
இத்தொடரில், பேரரசர் ஆற்றிய நன்றி உரையின் மீதான விவாதமும் நடைபெறும்.
ஆகஸ்ட் 27 வரை 25 ஆம் நாள்வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வு, கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளைக் (எஸ்ஓபி) கடைப்பிடிப்பதன் மூலம் புதிய இயல்புச்சூழலில் நடைபெறும்.