உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் யுகேந்திரன்

கலிபோர்னியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்டென்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு மலேசியாவைச் சேர்ந்த யுகேந்திரன் ராஜேந்திரன் தேர்வுசெய்யப்பட்டுள் ளார். 20 வயதான அவர் அண்மையில் எப்சோம் கல்லூரியில் தனது ஏ லெவல் படிப்பை முடித்துள்ளார். முன்னதாக இவர் 4 வயது இருக்கும்போதே கணிதப் பாடத்தில் பெரும் புலமை பெற்றுள்ளார்.

அவரின் மூத்த சகோதரிகள் பள்ளி பாடங்களைச் செய்யும்போது அருகில் இருந்து பார்த்து தனது நேரத்தைச் செலவழித்த அவர், பின்னர் பள்ளியில் தொடர்ந்து சிறந்த மதிப்பெண்களைப் பெற்று வந்துள்ளார்.

அதிலும் எஸ்பிஎம் தேர்வில் 11 ஏ+ பெற்று சிறப்புத் தேர்ச்சியடைந்தார். அதேசமயம் தமது பள்ளி காலத்தில் இதர மாணவர்களுக்கு முன்னுதாரணமாகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஏ லெவல் கல்வி முடித்தபின்னர் உலகப் புகழ்பெற்ற 15 பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு இவர் விண்ணப்பித்தார். அவற்றுள் நியூயார்க் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம். யாலே பல்கலைக்கழகமும் அடங்கும்.

தற்போது அவர் பல்லுயிர் பொறியியல் மற்றும் கணிதம், கணினி மென் அறிவியல் துறைகளில் இரு இளங்களைப் பட்டம் பெற எண்ணம் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சிறு வயதாக இருக்கும்போதே நான் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில ஆசைகொண்டேன். அந்த ஆசை நிறைவேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here