சொன்ன பேச்ச கேட்கணும் முன்னும் பின்னும் பார்க்கணும்!

குறைவதுபோல் கண்ணாமுச்சு காட்டிய கோவிட்-  19 இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறது என்றே தோன்றுகிறது. காரணம் சாதாரணமானதுதான். ஆனால், அதனால் ஏற்படுகின்ற விளைவு மோசமானது. இதை மக்கள் இன்னும் உணரவே இல்லை.

குறிப்பாக, கோவிட் ஆனந்தமடைவதற்குக் காரணம், தொற்றுக்கான உறுப்பினர்கள் பெருகி வருவதுதான். ஜுலை மாத இறுதிக்குள் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற சுகாதாரத்துறையின் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. இதற்கு என்ன காராணம்?

சொன்ன பேச்ச கேட்கணும் முன்னும் பின்னும் பார்க்கணும் என்ற சுகாதாரத்துறையின் வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதுதான்.

வெளிநாட்டிலிருந்தோ, உள்ளூரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களோ, 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது கட்டளை. ஆனால், அப்படியில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி, சுதந்திரமாக ஊர் சுற்றக்கிளம்பியதால் தொற்று அதிகமாகி, தொற்றுக்கு மகிழ்ச்சியாகிவருகிறது.

ஈப்போவில் ஒரு சமபவம். 72 வயதான பெண்மணி ஒருவர் கையில் கட்டப்பட்ட கொரோனா அடையாளைப் பட்டையுடன் கடையில் பசியாறிக்கொண்டிருந்திருக்கிறார்.. கடைக்காரர் இதைக்கண்டு அலறி அடித்துக்கொண்டு சுகாதாரத்துறையை அழைத்திருக்கிறார்.

அவர்கல் விரைந்து வந்தார்கள் கடை முழுமையும் தூய்மைப்படுத்தியிருக்கிறார்கள். இதே போல், மற்றொரு சன்மபவத்தில், சுகாதார அதிகாரிகள் தேடிச்சென்ற நபர் வீட்டில் இல்லையாம். இப்படிப்பட்டவர்கள் கொரோனாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் ஏஜெண்டுகளாக இருக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது. இவர்கல் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலிருந்து வேளியேறி சுதந்திரமாகச் சுற்றுவதால் கொரோனா தாகம் கூடிக்கொண்டே இருக்கிறது. கொரோனாவும் மகிழ்ச்சியுடன் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது .

இப்படி இருந்தால் கொரோனாவை அழிப்பது எப்படி? கனிந்துவரும் காலத்தை நாமே வெடிவத்துத் தகர்த்தால் கொரொனா ஒழியவே ஒழியாது.

இதற்கு மாற்று உருவாகிவிட்டது. இனி, எவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படப் போவதில்லை. தனிமைப்படுத்தப்படக் கூடியவர்கள் சுகாதரத்துறை ஒதுக்கித்தரும் இடங்களில் மட்டுமே தங்க வேண்டுமென்பதில் மிக உறுதியாக இருக்கிறது.

நாட்டில் கோரோனா தொற்று கவலைதரும் அளவில், இரட்டை எண்ணுக்குப்போய்க் கொண்டிருக்கிறது. இதற்குக்காரணம், சொன்ன பேச்சைக்கேட்கவில்லை என்பதுதான். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கையில் கட்டியிருக்கும் பட்டைகளுடன் சுற்றித்திரிவதுதான் முக்கிய காரணம். இவர்களால் மற்றவர்களுக்கும் தொல்லை. இவர்களை சுகாதாரத்துறை ஒதுக்கித்தரும் இடத்தில் தனிமைப்படுத்தினால்தான் விமோசனம் உண்டு. அதனால் சுகாதாரத்துறை சொன்ன பேச்சைக்கேட்கணும். முன்னும் பின்னும் பார்க்கணும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here