சிவன் அணிந்துள்ள ஆபரணங்களில் உண்மை விளக்கங்கள்

சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும்.

சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம் சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன் அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.

சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால் அந்த மனித உடலில் அமிலமும் நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.

சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here