வாய்ப்புகளுக்கான நாடு இந்தியா – ‘இந்தியா ஐடியாஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். அமெரிக்க – இந்திய வர்த்தக குழுமம் ஏற்பாடு செய்த இந்தியா ஐடியாஸ் உச்சிமாநாடு இன்று மாலை தொடங்கியது.

அப்போது இந்திய பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் பிரதமர் மோடி இந்தியா ஐடியாஸ் என்கிற தளத்தில் உரையாற்றிய போது பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு வசதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐடியாஸ் உச்சிமாநாட்டில் தனது முக்கிய உரையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக வேகமாக மேம்படுத்தப்படுகிறது என்றும், 8 வருடங்களில் இந்தியாவின் விமான போக்குவரத்து இரட்டிப்பு மடங்கு வளர்ச்சியடைய உள்ளது.

டிஜிட்டல் மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிய மருந்துகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்களில் வேகமாக இந்தியா முன்னேறிவருகிறது.

இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இந்தியா இருப்பதால் நிறுவனங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பாக உள்ளது.

2019-20ல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 74 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீத அதிகரிப்பு.” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நேரடி அன்னிய முதலீட்டில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.

பேரிடர் காலத்தில் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் மருந்தியல் துறையில் ஒரு வலுவான கூட்டாட்சியை உருவாக்கியுள்ளன. இப்போது இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய சிறந்த நேரம்.

பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் முதலீடு செய்ய இந்தியா உங்களை அழைக்கிறது. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான அன்னிய நேரடி முதலீட்டை 74% ஆக உயர்த்துகிறோம்.

இந்தியாவில் சுகாதாரத் துறை ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதத்தை விட வேகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்காலத்திற்கான நமது அணுகுமுறை மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் விமான போக்குவரத்து, காப்பீடு உள்ளிட்ட துறைகளிலும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here