ஹிந்தி டப்பிங்கில் கலக்கும் அஞ்சான் படம்!

கடந்த 2014ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி நிறுவனம் இணைந்து தயாரித்தது. யுவன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் மிகவும் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டு, பின் தோல்வியை தழுவியது. சமூக ஊடகங்களில் மிகவும் கேலி செய்யப்பட்டது. இந்தப் படத்தின் இந்தி டப்பிங் ‘கடார்நாக் கில்லாடி 2’ என்ற பெயரில் யூடியூப் வெளியிடப்பட்டது. இந்த டப்பிங் எதிர்பார்த்ததை விட வரவேற்பைப் பெற்று 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “லிங்குசாமி சார் இயக்கத்தில் சூர்யா சார் நடித்த ‘அஞ்சான்’ படத்தை பலரும் மோசமாக விமர்சித்தார்கள். ஆனால், அந்தப் படத்தின் இந்தி டப்பிங் ஆன ‘கடார்நாக் கில்லாடி 2’ யூடியூப் தளத்தில் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒவ்வொரு திரையுலகமும் வித்தியாசமான முறையில் இயங்குகிறது. ஆனால், நல்லதொரு பாடம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here