ஆகஸ்ட் 1 தொடங்கி முகக்கவசம் கட்டாயம் : டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்

கோலாலம்பூர்:  நெரிசலான பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது   ஆகஸ்ட்  1ஆம் முதல் கட்டாயமாகும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் சமீபத்திய அதிகரிப்பு கவலைக்குரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளின் வழி பொதுவில் நிலையான இயக்க நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது குறையத் தொடங்குகிறது. பொது போக்குவரத்தில் சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவது கூட போதுமானதாக இல்லை என்பதோடு புறக்கணிக்கப்படுகிறது என்று இஸ்மாயில் தனது செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சமீபத்தில் அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட கொத்துக்களின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு உந்துதல் பெற்றது என்றார். உலக சுகாதார அமைப்பு வழங்கியிருக்கும் வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here