இரண்டாம் கட்ட கோவிட்-19 சோதனைக்கு 2,897 பேர் வரவில்லை

பெட்டாலிங் ஜெயா: வீட்டு தனிமைப்படுத்தலின் 13 வது நாளில் இரண்டாவது கோவிட் -19 சோதனை செய்யத் தவறியதற்காக மொத்தம் 2,897 நபர்கள் திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்கி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இந்த நிபந்தனைக்கு இணங்க தவறியதற்காக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டத் தொடங்குவார்கள் என்று  தற்காப்பு  அமைச்சர் டத்தோஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ள அருகிலுள்ள மாவட்ட சுகாதார வசதியை தொடர்பு கொள்ள உத்தரவிடப்படுகிறார்கள்  என்று அவர் சனிக்கிழமை (ஜூலை 25) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 9,600 நபர்கள் இன்னும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார். காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக அதிரடி சோதனைகளை  நடத்துவார்கள் என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட, நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் போர்டிங் மற்றும் கோவிட் -19 சோதனைகளின் செலவை ஏற்க வேண்டும். நாட்டிற்கு வருபவர்களால் கோவிட்-19 தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்குக் கட்டுப்படத் தவறியதாலும் ஆபத்து அதிகரிப்பதால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, வெளிநாட்டிலிருந்து திரும்பும் 319 நபர்கள் கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய நான்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், புருனே, கத்தார், பாகிஸ்தான், சவுதி அரேபியர்கள், ஹாங்காங், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட், சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 12 நாடுகளில் இருந்து அவர்கள் திரும்பி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here