தமிழகத்தில் 3 ஆயிரத்து 500-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது(மறுகணக்கீட்டில் சேர்க்கப்பட்ட 444 உயிரிழப்புகள் உள்பட).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here