முன்னிலை பணியாளர்களை கெளரவப்படுத்தும் “பரிவுமிக்க மலேசியா” கருப்பொருள்

இந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆண்டு என்றால் அது மிகையாகாது. கோவிட்-19 என்ற வைரஸ் தொற்று உலக நாடுகளை இவ்வாண்டு தொடக்கம் முதல் ஆட்டிப்படைத்து வருகின்றது.

நம் நாட்டிலும் இவ்வாண்டு தொடக்கம் முதல் பரவத் தொடங் கிய இந்தத் தொற்றினை அரசாங்கமும் மக்களும் குறிப்பாக முன்னிலைப் பணியாளர்களும் ஒன்றிணைந்து வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக நாட்டில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலான தொழில்துறைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

இதனால் பெரும்பாலானோர் தற்காலிகமாக வேலையை இழக்க நேரிட்டது. ஆனாலும் நடப்பு அரசாங்கம் மக்களின் நலன் கருதி தேசியப் பரிவுத் திட்டத்தின் வாயிலாகப் பல்வேறு உதவிகளை மக்களுக்கு நல்கியது.

தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சும் இந்த வைரஸ் தொற்று குறித்த தகவல்களையும் அதனை எதிர்கொள்ளும் முறைகளையும் உடனுக்குடன் மக்களுக்குப் பகிர்ந்து வருகின்றது. இவ்விவகாரத்தில் அமைச்சு வழங்கிய பங்கும் அளப்பரியது.

அதேபோல் இத்தொற்றினை எதிர்கொள்ள மருத்துவப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள், ராணுவப் படையினர், உணவுப் பொருள் அனுப்புபவர்கள், ஊடக வியலாளர்கள் என முன்னிலைப் பணியாளர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துவந்தனர். மக்களும் இந்த இக்கட்டான நிலையில் இனம், மதம் கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து தற்காத்துக் கொண்டனர்.

இவை அனைத்திலும் பரிவு என்ற ஒரு மனப்பான்மை உயிர்த்தெழுந்து மேலோங்கி நிற்கிறது. அதனைக் கௌரவிக்கும் வகையில் இவ்வாண்டு தேசிய சுதந்திர தினம், மலேசிய தினம் ஆகிய சிறப்பு நாட்களுக்குக் கருப்பொருளாக –MALAYSIA PRIHATIN (பரிவுமிக்க மலேசியா) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

இந்தக் கருப்பொருளை மையமாகக் கொண்டு அண்மையில் இதற்கான முத்திரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கூச்சிங், சரவாக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு சுதந்திரம் – மலேசிய தினம் ஆகியவற்றின் செயற்குழுத் தலைவரும் தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சருமான டத்தோ சைபுடின் அப்துல்லா Dato’ Saifuddin Bin Abdullah) தலைமையேற்று இக்கருப்பொருளையும் முத்திரையையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

குறிப்பாக பல இன மக்களாகிய மலேசியக் குடிமக்கள் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் பரிவு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த முத்திரை இதயம் வடிவில் ஜாலோர் கெமிலாங் எனப்படும் தேசியக் கொடியில் உள்ள வர்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவ்வாண்டு தேசிய மாதத்தை முன்னிட்டு 4 முக்கிய நிகழ்ச்சிகள் அதாவது தேசியக் கோட்பாட்டின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் (ஜூலை 9- ஙெ்ப்டம்பர் 16 வரை), 2020ஆம் ஆண்டு சீதந்திர மாதத் தொடக்க விழா மற்றும் தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்ச்சி (Pelancaran Bulan Kebangsaan dan Kibar Jalur Gemilang 2020), சுதந்திர தினக் கொண்டாட்ட விழா (கோலாலம்பூர்) மற்றும் மலேசிய தினக் கொண்டாட்ட விழா (சிபு, சரவாக்) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றை மேலோங்கச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் – போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

 

* Pertandingan Bintang Patriotik Smule 2020;Pertandingan Bintang Patriotik Smule 2020;
* Pertandingan Pidato Kenegaraan;
* Pertandingan Pengisahan Kenegaraan;
* Pentarama Live Jam – Edisi Merdeka;
* Pertandingan Mewarna dan Melukis Sempena Bulan Kebangsaan 2020;
* Info On Wheels (IOW) Merdeka;
* Sayembara Cerpen Merdeka;
* Sayembara Sajak Merdeka; dan
* Pertandingan Fotografi Klik@Merdeka 2020.

இதற்கிடையே, நேற்று முன்தினம் 2020ஆம் ஆண்டு சுதந்திர மாதத் தொடக்க விழா மற்றும் தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்ச்சி (Pelancaran Bulan Kebangsaan dan Kibar Jalur Gemilang 2020), புத்ராஜெயாவில் நடைபெற்றது.

புதிய வழமைக்கேற்ப விதிமுறைகள் – பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் YAB Tan Sri Muhyiddin Yasin, PM Malaysia) தலைமையேற்று கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவருடன் இந்நிகழ்ச்சியில் டத்தோ சைஃபுடின் அப்துல்லா, மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் குறிப்பாக முன்னிலைப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு கருப்பொருளை முன்வைத்து உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக Info On Wheels Merdeka (IOW Merdeka) எனும் சதந்திர தின சிறப்பு தகவல் வாகனத் தொடக்க விழாவும் நடைபெற்றது. பிரதமர் கொடியசைத்து இந்தப் பயணத்தைத் தொடக்கி வைத்தார். இதில் மலேசியத் தகவல் துறையைச் சேர்ந்த 10 வாகனங்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன.

குறிப்பாக தேசியப் பற்றையும் மலேசியக் கோட்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் பல பாடல்கள் ஒலிபரப்பப்படுவதோடு தேசிய பிரச்சாரங்கள் சார்ந்த தகவல்களும் பரிமாறிக் கொண்டு இந்த வாகனங்கள் நாடு தழுவிய அளவில் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன.

இந்தப் புனித சுதந்திர மாதத்தில் நாட்டுப்பற்றினை மேலோங்கச் செய்யும் வகையில் குடிமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதோடு பல்வேறு பயனுள்ள தகவல்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என பிரதமரும் அமைச்ங்ர் டத்தோ சைஃபுடின் அப்துல்லாவும் கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here