லஞ்சமற்ற வர்த்தகச் சூழலை உறுதி செய்ய செக்‌ஷ்சன் 17A சட்டத்தைக் கடைப்பிடிப்பீர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (2009) செக்‌ஷ்சன் 17A

வருமானம் சார்ந்த ஒரு நிறுவனம் அல்லது குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் மற்றும்
கூட்டமைப்பாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காக லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டால் அது குற்றமாகக் கருதப்படும். இந்தப் பிரிவின் அடிப்படையில் அந்த நபர்களின் செயலை அந்த நிறுவனத்தின் மேல்மட்டத் தரப்பினர் அறிந்திருந்தாலோ அல்லது அறியா விட்டாலோ அந்நிறுவனத்தின்
மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இந்தப் புதிய சட்டம் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்‌ஷ்சன் 17A குறித்து ஆணையத்தின் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ நோரஸ்லான் முகமட் ரஸாலி பல விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

கே: இந்தப் புதிய சட்டம் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை அடுத்து இதுவரை எந்தவொரு குற்றமும் பதிவு ஙெ்ய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது இச்ங்ட்டத்தின் நிலை என்ன?

பதில்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (2009) செக்‌ஷ்சன் 17A கடந்த ஜூன் மாதத்தில் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே அது குறித்த சிறப்பு விளக்கங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

வர்த்தகக் குழுமங்கள் அல்லது தனிநபர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளும்பொழுது அதன் செயல்பாடுகள் சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய விசாரணை அதிகாரிகள் தங்களின் விசாரணைப் பணிகளை முழுவதுமாக மேற்கொள்வர்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் உட்பட முன்ன தாக நிறுவனங்களின் லாபத்திற்காக தனிநபர்கள் செய்யும் குற்றங்கள் குறித்த சம்பவங்களின் அடிப்படையில் இன்னும் நுணுக்கமாக ஆய்வுகளை மேற்கொள்வதால் அதனைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும்.

கே: பொதுத்துறை மற்றும் தனியார்துறைகள் என இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்தத் துறையில் கையூட்டுச் சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன?

பதில்: கைது நடவடிக்கையின் அடிப்படையில் பார்த் தால் பொதுத்துறைகளில் குறிப்பாக அமலாக்கம் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுகளில் அதிகக் கையூட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

கடந்த ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை கையூட்டுக் குற்றங்களுக்காக பொதுத்துறைப் பணியாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் (1,496) இந்தப் பிரிவினர் 46.9 விழுக்காடாக உள்ளனர். இந்நிலையில் தனியார்துறை உட்பட இதர பிரிவுகளில் லஞ்சம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.1 விழுக்காடாக (390) உள்ளது.

பொதுத்துறையில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தனியார் துறைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அதுவும் அதிகம்தான்.

கே: லஞ்சக் குற்றச்சாட்டில் தனிநபர் மற்றும் செக்‌ஷ்சன் 17A சட்டப்பிரிவின் கீழ் நிறுவனக் குழுமங்களையும் விசாரணை செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

பதில்: செக்‌ஷ்சன் 17A கீழ் குற்றச்சாட்டினை நிரூபிப்பது தொடர் பில் முன்னெடுக்கும் விசாரணை செயல்பாடுகள் இதர லஞ்சக் குற்றவியல் விசாரணைகளைப் போலவே சரிசமமாக இருக்கும்.

நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்னிருத்தும் செயல்பாட்டிலும் அவர்கள் வழங்கும் வாக்குமூலங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கடப்பாடும் உள்ளது.

இருப்பினும் செக்‌ஷ்சன் 17A சட்டப்பிரிவின் கீழ் இதுவரை குற்றச் சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில் குழும நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கக்கூடிய விசாரணைகள் அனைத்தும் பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கே: ஒரு நபரை செக்‌ஷ்சன் 17A கீழ் குற்றஞ்சாட்ட அல்லது விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால் முன்னதாக அவரை செக்‌ஷ்சன் 16 அல்லது 17 கீழ் குற்றஞ்சாட்ட வேண்டுமா?

பதில்: நீதிமன்றத்தில் லஞ்சக் குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட முடியும் என்றால் முன்னதாக செக்‌ஷ்சன் 16 அல்லது செக்‌ஷ்சன் 17 இன் கீழ் குற்றஞ்சாட்டாமல் நேரடியாக செக்‌ஷ்சன் 17அஇன் கீழ் குற்றஞ்சாட்டலாம்.

கே: ஒரு நிறுவனத்தில் செக்‌ஷ்சன் A இன் கீழ் குறிப்பிட்டதைப்போல் லஞ்ச குற்றம் நிகழ்ந்தால் அந்நிறுவனத்தைச் சேர்ந்த யாரைக் குற்றஞ்சாட்டுவது?

பதில்: லஞ்சக் குற்றம் நிகழ்ந்தால் ஒரு நிறுவனத்தைச் சார்ந்த இயக்குநர், கூட்டாளர்கள், அந்நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை அறிந்திருந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் பொறுப்பேற்க வேண்டும் என செக்‌ஷ்சன் 17A (3) கீழ்
வரையறுக்கப்பட்டுள்ளது.

கே: தங்களின் குழுமங்களில் போதிய கட்டமைப்புகளைச் செயல்படுத்துவது குறித்து வர்த்தக நிறுவனங்கள் யாரிடமாவது தெரியப்படுத்த வேண்டுமா?

பதில்: இவ்விவகாரத்தில் அவர்கள் யாரிடமும் தெரியப்படுத்த வேண்டியதில்லை. இருப்பினும் பிற்காலத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

கே: தங்கள் குழுமங்களில் போதிய கட்டமைப்பினைச் செயல்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாக முடியாமல் தவிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?

பதில்: லஞ்ச நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை அமல்படுத்துவதற்கு அதிகளவில் செலவிடத் தேவையில்லை. எனவே நிறுவனங்களின் நிதி நிலைமை இதில் ஒரு காரணமாகக் கருதப்படாது. அந்நிறுவனங்கள் தாமாகவும் அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆதரவோடும் லஞ்ச சவால்கள் மேலாண்மை நடவடிக்கைகளை ஊழல் சவால்கள் நிர்வகிப்பு (CRM) மேற்கொள்ள முடியும்.

கே: ஒருவேளை நிறுவனங்கள் ஊழல் தடுப்பு மேலாண்மை செயல்பாடு (ABMS) மற்றும் ஊழல் தடுப்பு/எதிர்ப்பு உறுதிமொழி செயல்திட்டம் (CIP) போன்ற ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் அந்நிறுவனங்களை செக்‌ஷ்சன் 17A இன் கீழ் குற்றஞ்சாட்ட வாய்ப்புள்ளதா? 

பதில்: இவ்விரு செயல் திட்டங்களைப் பின்பற்றுவதால் ஒரு வர்த்தக நிறுவனத்திற்குப் போதிய ஊழல் தடுப்பு விதிமுறைகள் உள்ளதாகக் கருதி விட முடியாது. இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தில் நிறுவனத் தரப்பினர் லஞ்ச நடவடிக்கைகளை எதிர்கொள் வதற்கான செயல் திட்டங்கள் வெறும் ஆவணங்களில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

கே: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வையில், லஞ்சத்தை எதிர்கொள்ள அமைச்சு மற்றும் அரங்சாங்க இலாகாக்களில் உள்ள உயர்நெறி செயல்பாட்டு பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

பதில்: அமைச்சு, அரங்சாங்க இலாகாக்களின் உள்கட்ட மைப்பில் லஞ்ச நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் ஒன்றுதான் இந்த உயர்நெறி செயல்பாட்டு பிரிவு.

இந்தப் பிரிவின் அடிப்படையினை உறுதி செய்ய அதன் சவால்களைச் சமாளிக்கும் திறனை அதிகரிக்க வேண்டிய கடமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உள்ளது. இந்தச் சவால்கள் மூன்று வகைப்படும். அதாவது அதிகம், மிதமானது மற்றும் குறைவானது.

சவால்களைச் சமாளிக்கும் திறனைப் புதுப்பிக்கும் நடவடிக்கை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது தேவைப் படும்போது மேற்கொள்ளப்படும். இந்த உயர்நெறி செயல் பாட்டு பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்பவர் முறையான தகுதி அம்சங்கள் அல்லது ஊழல் தடுப்பு ஆணையம் நிர்வகிக்கும் உயர்நெறி செயல்பாட்டு பிரிவு அதிகாரி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிகள் மலேசிய ஊழல் தடுப்பு அகாடாமி யில் (MACA) மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இந்த நன்னெறி நிர்வாகச் செயல் பாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அப்பிரிவின் தலைவர் செயல்பாடுகளின் அடைவு நிலையை அமைச்சு – அரசாங்க இலாகாக்களின் தலைமைச் செயலாளர், ஊழல் தடுப்பு ஆணையத் தரப்பினரிடம் 4 மாதங்களுக்கு ஒரு முறை அதாவது மே 15ஆம் தேதி, செப்டம்பர் 15ஆம் தேதி மற்றும் ஜனவரி 15ஆம் தேதிகளில் தெரியப்படுத்த வேண்டும்.

கே: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (2009) செக்‌ஷ்சன் 17A செயல்படுத்தப்பட்டது குறித்து உங்களின் எதிர்பார்ப்பு என்ன? அதோடு வர்த்தக நிறுவனங்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

பதில்: இதுவரை இந்தச் சட்டப்பிரிவின் கீழ் எந்தவொரு வர்த்தக நிறுவனங்களும் குற்றஞ்சாட்டப்படவில்லை. எனவே இந்தச் சட்டப் பிரிவினை மீறி லஞ்சச் செயல்களில் ஈடுபட்டு பின்னர் நாட்டில் குற்றஞ்சாட்டப்படும் முதல் வர்த்தக நிறுவனமாக வேண்டாம் என நான் அனைத்துக் குழுமங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சட்டப்பிரிவைச் செயல்படுத்துவதன் மூலம் முற்றாக லஞ்ச நடவடிக்கை இல்லாத வர்த்தகச் சூழலை உருவாக்க முடியும். இதன் வாயிலாக நாட்டில் முதலீடு செய்ய அதிகமான அந்நிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க முடியும். அப்படி நிகழ்ந்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும். எனவே இந்த செக்‌ஷ்சன் 17A சட்டப்பிரிவை வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாகக்
கடைப்பிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here