கடல்கோள்

கரைசேர அலையுது கடல்நீர் மனம்

அக்கரைக்குத்தி சாகுது அலைநீர் தினம்

அலைகளின் பினக்குவியலைப் புதைத்தது மணல்

துவண்டிட மாட்டேன்னென்றது கடலில் மடல்

 

வருணனயே வருடும் அழகிய அலைகள்

கரையின் கல்மனதை ஏனோ கரைக்கவில்லை ?

கடல்கடந்து செல்லும் வெற்றியாளர்கள் ஒரு புறம்

கரையைக் கடக்கா ஆழியின் தோல்வி மறுபுறம்

 

தாமே சிறந்தவன் என்றன கரைகளில் இருந்த மணல்

கடலனுப்பிய அலைதூதினை நிராகரித்தது கரையின் அணல்,

அயராது முயற்சித்த கடல் பொங்கியெழுந்தது ஒரு நாள்,

கரையோ தடமின்றி போன கறைநாள்.

-திவ்யா விநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here