ஆனால் தற்போது இயக்குனர், தயாரிப்பாளராக மாறி சிறு படங்களை தயாரித்து வருகிறாராம். இதனால் தான் இயக்கும் அடுத்த படத்தை நீங்களே தயாரித்து வெளியிடுங்கள் என்று பலர் இயக்குனரிடம் கூற, அதற்கு அவர் என்னால் முடியாது என்று பயந்து கூறுகிறாராம்.
முன்னணி இயக்குனர் ஒருவர் அடுத்ததாக தான் இயக்கும் படத்தை தயாரிக்க பயப்படு கிறாராம். தமிழில் 4 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம். இவர் ஒரே நடிகரை வைத்து 3 படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறாராம். ஆனால், அந்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கவில்லையாம்.