பெண்ணை தாக்கிய நாய் – உரிமையாளருக்கு 2,000 வெள்ளி அபராதம்

மலாக்கா: இந்தோனேசியப் பெண்ணை நாய் தாக்கி காயப்படுத்தியதால்  நாயின் உரிமையாளரான மீனவருக்கு   2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையின் படி, லீவ் கவனக்குறைவாக தனது  வீட்டின் கேட்டை  திறந்து விட்டுவிட்டார். இதனால் நாய் வெளியே ஓடி 23 வயதான புர்பா எவிடா கிறிஸ்டினாவிற்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், மாஜிஸ்திரேட் முகமட் இஸ்வான் முகமது நோ, 43 வயதான லீ சீ சீக்கு ஆகஸ்டு 6ஆம் தேதி (இன்று)  அபராதம் விதித்தார்.

இச்சம்பவம் வீட்டின் முன் எண் 5, ஜாலன் மாரிக் 8, தாமான்  தஞ்சோங் மினியாக் பெர்டானா என்ற இடத்தில் ஜூலை 27 தேதி  இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. தண்டனைச் சட்டத்தின் பிரிவு 289 ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது  2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.  லீவின் வழக்கறிஞராக  சி.சுரேந்திரன் ஆஜாரானார். மேலதிக நடவடிக்கைகளுக்காக நாயை மலாக்கா  நகராண்மைக் கழகத்திடம்  (எம்.பி.எம்.பி)  ஒப்படைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here