குளிர்சாதன பெட்டியில் மான்

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்திற்கு மேற்கே ராஜபாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது40) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.

இந்த தோப்பில் கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39 ) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் ராஜபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 4 கிலோ எடை உள்ள மான்கறி, தோல், தலை, கொம்பு இருந்தது. மேலும் இதனை இவர் உணவிற்காகவும், இறைச்சி விற்பனைக்காகவும் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதற்காக இவர் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, ரம்பம், கோடாரி, மான் இறைச்சி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here