மத்திய அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை அறிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றம் செய்ய சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதுபற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இனி கல்வி அமைச்சகம் என அழைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.