அமைச்சருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் – சுகாதார அமைச்சு தகவல்

துர்க்கி நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழில் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமன் ரஸாலிக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் விதிக்கப்பட்டதாக  சுகாதார அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

அவர் சட்டவிதிகளை மீறி செயல்பட்ட காரணங்களுக்காக இந்த கம்பாவுன்ட் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் தேதி கைருடின் துர்க்கி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு திரும்பியுள்ளார். முதற்கட்ட கோவிட் சோதனையில் தொற்று இல்லை என்று காட்டியது. அதோடு 2 மற்றும் 3ஆவது நாளும் தொற்று இல்லை என்றும் தான் காட்டியது. இருந்தாலும் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை மீறியது குற்றமாக தான் கருதப்படுகிறது.

எனவே அவருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் அளிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி அவர் அந்த தொகையை செலுத்திவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here