சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இதனை மாயா என்பவர் இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here