நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய 86 பேர் கைது

தற்போது அமலில் இருந்து வரும் மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாடு ஆணையை மீறி செயல்பட்ட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதி 75 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

கூடல் இடைவெளி கடைப்பிடிக்காதது, முகக் கவசம் அணியாதது, வாடிக்கையாளர்களின் தகவல்களை பெறாதது போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் விதித்த எஸ்ஒபி பின்பற்றுதலை கவனிக்க 16,983 அதிகாரிகள் கொண்ட 4,814 குழு களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. 3,988 பாசாராயா, 5,188 உணவகங்கள், 1,026 சிறு வியாபாரிகள், 1,668 தொழிற்சாலைகள், 3,617 வங்கிகள், 925 அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை 24ஆம் தேதி முதல் நேற்று வரை 15,174 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் 69 ஹோட்டல், 5 பயிற்சி மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் வேளையில் 7,469 பேர் வீட்டிற்கு அனுபப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள எல்லைப் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் 28,729 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றனர் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here