ஹெரோய்ன், ஷாபு போதைப்பொருள் பறிமுதல்

4 இளைஞர்கள் கைது

கூலிம், ஆக. 22 –

போதைப்பொருளை வைத்திருந்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து ஹெரோய்ன், ஷாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூலிம் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி ஓசிபிடி ஹசார் பின் ஹாஜி ஹாசிம் தெரிவித்தார்.

நேற்று பின்னிரவு 1.30 மணி அளவில் கூலிம் மாவட்டப் போலீசார் மேற்கொண்ட ஓப்பராசி ஜந்தாஸ் நடவடிக்கையில் லுனாஸ் தாமான் டேசா மக்மூர் வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வீட்டில் 20 முதல் 31 வயதுடைய நான்கு இந்திய இளைஞர்கள் நான்கு பொட்டலம் ஹெரோய்ன் மற்றும் 11 பொட்டலம் ஷாபு போதைப்பொருளை வீட்டு ஹாலில் மேசையின் மீது வைத்திருந்தார்கள்.

2 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்புள்ள 21.7 கிராம் ஹெரோய்ன் மற்றும் 9.0 கிராம் ஷாபு போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இந்திய இளைஞர்களும் லுனாஸ் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள தாமான் டேசா மக்மூர், சுங்கை சுலுவாங் தோட்டம், தாமான் மக்மூர் மற்றும் தாமான் பேராக் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here