உடுமலை அருகே மலைவாழ் பெண் சுட்டுக்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் மலைவாழ் பெண் சந்திரிகா. அந்த பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சந்தனக்கட்டை கடத்தல் வழக்கில் கைதானவர். இவருக்கும் வனக்காவலர்களுக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வனக்காவல்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அவர்கள் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க மலைவாழ் பெண் சந்திரிகாவிடம் கேட்டுள்ளார். அவர் கூற மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சந்திரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக காளியப்பன் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here