காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும்

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் கலந்து பேசி கூட்டு தலைமையை தீர்மானிக்க வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகள் அக்கட்சியில் எழுந்துள்ள நிலையில், காரிய கமிட்டி இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் சாசன மாண்புகளையும், ஜனநாயக கொள்கைகளையும் சீர்குலைக்கும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எதிராக வலிமையாக போராட வேண்டிய நேரம் இது என்றும், கட்சி தலைமை பற்றிய பிரச்சினை கிளப்புவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறி உள்ளார். அத்துடன், சோனியா காந்தி விரும்பும் வரை அவர் கட்சி பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு ராகுல் காந்தி முழு தகுதி பெற்றதும் அவர் கட்சி தலைவர் பதவிக்கு வரலாம் என்றும் அறிக்கையில் அமரிந்தர் சிங் கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here