கேரளாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மஞ்சுமாள் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு 14 வயது நிரம்பிய மகள் உள்ளார். இந்த குடும்பம் வசித்து வந்த வீட்டின் அருகே உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அந்த வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறுமியை வீட்டைவிட்டு வலுக்கட்டயாமாக யாருக்கும் தெரியாமல் கடத்தி சென்றுள்ளனர்.

கடத்தி சென்ற சிறுமியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 6 பேரும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை வீட்டில் விட்டுசென்றுள்ளனர்.

அதன் பின் சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரமெல்லால் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பலமுறை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மார்ச் மாதம் முதல் இம்மாதம் வரை சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவராமலேயே இருந்துள்ளது.

வடமாநில தொழிலாளர்களின் தொடர் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான சிறுமி கடந்த சில நாட்களாக மனரீதியிலான பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறியாத சிறுமியின் பெற்றோர் சிறுமிக்கு மன நலம் தொடர்பான கவுன்சிலிங் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த மருத்துவ கவுன்சிலிங்கின் போது தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி அந்த சிறுமி மனநல ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கேட்ட மனநல ஆலோசகர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார்மனு அளித்தனர்.

இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலார்களை கைது செய்ய அவர்கள் தங்கி இருந்த மஞ்சுமாள் பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் மட்டுமே இருந்துள்ளனர். உடனடியாக அந்த மூன்றுபேரையும் கைது செய்த போலீசார் எஞ்சியவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரத்தை குற்றவாளிகளிடம் விசாரித்தனர்.

விசாரணையில் எஞ்சிய 3 குற்றவாளிகளும் தங்கள் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த கேரள போலீசார் சொந்த மாநிலம் தப்பிச்சென்ற எஞ்சிய 3 வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரித்தப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here