ஹாலிவுட் ஆல்பத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவருடைய இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை உருவாகியுள்ளார்.

‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ். இந்த ஆல்பம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here