கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்

கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் மோர்கன் அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. முகமது ஹபீஸ் 69 ரன்களும், பாபர் ஆசாம் 56 ரன்களும், பகர் ஜமான் 36 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நல்ல ஆரம்பத்தை கொடுத்தனர். பெயர்ஸ்டோ 44 ரன்களும், பேண்டன் 20 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் மோர்கண் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மலன் 54 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி கரமாக முடித்தார்

இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து 1-0 எற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது என்பதும் அடுத்த போட்டி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here